துயர் பகிர்வு
ஈழத்து எழுத்தாளரும், சமூக உணர்வாளருமான “வள்ளியம்மை சுப்பிரமணியம்” அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

ஈழத்து எழுத்தாளரும்…
சமூக உணர்வாளருமான,
“வள்ளியம்மை சுப்பிரமணியம்”
அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்தம் துயரிலும் பங்குகொள்கிறது.
2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள்”, 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “கற்க கசடற…” மற்றும் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “வெற்றிக்கு வலிகள் தேவை” போன்றன நூலக வலைத்தளத்தில் “வள்ளியம்மை சுப்பிரமணியம்” என்ற பகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இவரது நூல்களாகும்.
இவற்றை கீழ்காணும் இணைப்பில் காணலாம்:
பகுப்பு: வள்ளியம்மை சுப்பிரமணியம் : https://tinyurl.com/4yczvp45
மேலும் நூலக நிறுவனத்தின் பல்லூடக நூலக வலைத்தளத்தில் இவரது வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
– 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் 1 மணித்தியாலம் கொண்ட சாதியம் தொடர்பான வாய்மொழி வரலாற்றுப் பதிவு.
– 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இவரது வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ள 2 மணித்தியாலங்கள் கொண்ட வாய்மொழி வரலாற்றுப் பதிவு.
வள்ளியம்மை சுப்பிரமணியம் சேகரம் : https://tinyurl.com/39yt3vux
#நூலகநிறுவனம்#துயர்பகிர்வு#வள்ளியம்மை சுப்பிரமணியம்