| பீஜிங்
சீனா-நேபாள எல்லைப் பகுதியில் கைரோங் என்ற நகரம் உள்ளது. கைரோங் என்ற பகுதி தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகும். இங்கு இன்று அதிகாலையில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் 17 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் கூறியதாவது:
இன்று அதிகாலையில் கைரோங் நகரில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேரை காணவில்லை. இந்த சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 11 பேரும், நேபாளத்தைச் சேர்ந்த 6 கட்டுமானத் தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர். காணாமல் போனவர்கள் சேற்றில் சிக்கி இருக்கலாம். ஆகவே அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. – இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.