“பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.” – இந்திய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

லக்னோ.

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: உலகளாவிய நிலைமையைப் பாருங்கள், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைந்துள்ளன, அவை அதிகரிக்கவில்லை. எத்தனால் தயாரிக்கும் பணியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. நேற்று அசாமில், பிரதமர் மோடி மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் ஆலையைத் திறந்து வைத்தார். உத்தரப் பிரதேசம் எரிசக்தித் துறையிலும் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்படி கலப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமித்துள்ளோம்

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பெட்ரோலில் 10% எத்தனை நாள் கலக்கும் இலக்கை அடைவோம் என்று மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்த இலக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு அடையப்பட்டது.

2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு இருந்தது. ஐந்து ஆண்டுக்கு முன் நாங்கள் அதைச் செய்தோம். எந்த சர்ச்சையும் இல்லை. இதை மேலும் தொடருவோம் என்று சில அறிக்கைகள் வெளியிடப்பட்டபோது பிரச்னை தொடங்கியது. பெட்ரோலில் இன்னும் அதிகமாக எத்தனால் கலப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. எத்தனால் திட்டத்தின் மூலம், எரிசக்தி துறையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. வளிமண்டல மாசுபாடும் குறைந்துள்ளது. இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *