”ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்,” – அதிமுக பொதுச்செயலர்

சென்னை

அதிமுக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது:

அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள். உயிரோட்டமுள்ள கட்சி.இது இறைவனால் உருவாக்கப்பட்ட கட்சி. ஏழைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி.குடும்பத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல.யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், கடவுள் மன்னிக்க மாட்டார்.

அதிமுகவை எவராலும் ஒண்ணும் பண்ண முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் எங்களுக்கு முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன். சிலரை கைகூலிகளாக வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறீர்கள். அவர்களை அடையாளம் காட்டிவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டுவோம்.

சில பேரை அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள். அவர்களை மன்னித்து அரவணைத்து துணை முதல்வர் பதவியை கொடுத்தோம். அவர்கள் திருந்த பாடில்லை. அதிமுகவின் கோவிலாக இருக்கும், அதிமுக தலைமையகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் சேர்க்க வேண்டுமா.

இன்னொருவர், அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்தி சென்றவர். அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? அவர்களை யார் ஏற்றுக் கொள்வது.உறுதியான எண்ணம் உண்டு.உறுதியான மனநிலை உண்டு. எதற்கும் அஞ்சாத ஆற்றல் உண்டு. யாரும் என்னை மிரட்டி பார்க்க முடியாது.

இதுவரை, அதிமுக ஆட்சி செய்யும் போதும் சரி, இப்போதும் சரி, மத்தியில் யாரும் எந்த அச்சுறத்தலும் கொடுக்கவில்லை. நன்மை தான் செய்தனர். ஜெயலிதா மறைவுக்கு பிறகு, சில பேர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தனர். ஆடசியை கவிழ்க்க பார்த்தனர். மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *