
வரலாற்றில் இன்று
நீலம் சஞ்சீவரெட்டி, இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் (1977) |
அப்பல்லோ 11ல் பயணித்த விண்வெளி வீரர், நீல் ஆர்ம்ஸ்டிராங், முதல் மனிதராக சந்திரனில் இறங்கி நடந்தார் (1969) |
ஸ்ரீரிமாவோ பண்டார நாயகே, இலங்கையின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் முதல் பெண் பிரதமரும் அவர் தான் (1960) |
பிரபல அமெரிக்க நாவலாசிரியர், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே பிறந்த நாள் (1899) |
தமிழ் நாவலின் தந்தை, மாயூரம், வேதநாயகம் பிள்ளை இறந்த நாள் (1889) |
நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள்(2001) |
பெல்ஜியம் தேசிய தினம் |
இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899) |
ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954) |
லிபியா-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977) |
21 ஜூலை 2025 | திங்கள் | இன்று – சர்வ ஏகாதசி. | |
தேதி | 05 – ஆடி – விசுவாவசு | திங்கள். |
நல்ல நேரம் | 06:15 – 07:15 கா / AM 04:45 – 05:45 மா / PM |
கௌரி நல்ல நேரம் | 09:15 – 10:15 கா / AM 07:30 – 08:30 மா / PM |
இராகு காலம் | 07.30 – 09.00 |
எமகண்டம் | 10.30 – 12.00 |
குளிகை | 01.30 – 03.00 |
சூலம் | கிழக்கு |
பரிகாரம் | தயிர் |
சந்திராஷ்டமம் | சுவாதி விசாகம் |
நாள் | மேல் நோக்கு நாள் |
லக்னம் | கடக லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 48 |
சூரிய உதயம் | 06:01 கா / AM |
ஸ்ரார்த திதி | துவாதசி |
திதி | இன்று காலை 08:56 AM வரை ஏகாதசி பின்பு துவாதசி |
நட்சத்திரம் | இன்று இரவு 09:08 PM வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம் |
சுபகாரியம் | நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் |
இன்றைய ராசி பலன் | 21 ஜூலை 2025 | திங்கள்.
மேஷ ராசி நேயர்களே குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் இருந்த தடை ங்கும். | ரிஷப ராசி நேயர்களே குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். |
மிதுன ராசி நேயர்களே குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். | கடக ராசி நேயர்களே விருப்பப்படியே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். வேகமான வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். |
சிம்ம ராசி நேயர்களே நெடுநாட்களாக இருந்த மனசங்கடம் நீங்கும். பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். | கன்னி ராசி நேயர்களே அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. புது முயற்சிகளை தள்ளி போடவும். பிரபலங்களின் திடீர் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் அமைதி நிலவும். |
துலாம் ராசி நேயர்களே குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள விருப்பம் ஏற்படும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். | விருச்சிக ராசி நேயர்களே குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். புது விஷயங்களில் ஆர்வம் கூடும். பிரியமானவர்கள் பாச மழை பொழிவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். |
தனுசு ராசி நேயர்களே குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தேங்கிய நின்ற வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். | மகர ராசி நேயர்களே பேச்சில் இனிமை கூடும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். |
கும்ப ராசி நேயர்களே புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். பிரபலங்கள் அறிமுகமாவர். பண வரவில் சின்ன தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். | மீன ராசி நேயர்களே நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும். |
வார ராசி பலன் (21-07-2025 To 27-07-2025)
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும்..பக்தி உணர்வு மேலோங்கும். பொருளாதார வளம் மேம்படும். பேச்சு திறமையால் பல நல்ல நபர்களை சம்பாதிக்க முடியும். மனதில் பல கவலைகள் இருந்தாலும் அதை பற்றி எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த உதவி நண்பர்களின் மூலம் தக்க சமயத்தில் கிடைக்கும். உங்களது பல நல்ல செயல்கள் காரணமாக சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிர்பாராத சில பயணங்கள் செய்யவேண்டி இருக்கும். குடும்ப மருத்துவரிடம் சென்று உடல் நலத்தை பரிசோதித்து கொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும். | ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல புதிய திட்டங்களை தீட்டி அதை சரியான விதத்தில் பயன் படுத்த முடியும். வரும் தடைகளையும் மீறி நீங்கள் வெற்றி கொள்வது உறுதி. புது நண்பர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். உற்றார், உறவினர்களின் பகை மாறும். பெரியோர்களிடம் உங்கள் குறைகளை சொல்லவும். எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப வசதிகள் பெருகும். பெண்கள் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும் |
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மனதில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் கூடும். வரும் எதிர்ப்புகள் தானே விலகும். நீங்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருக்க முடியும். குடும்பத்தில் பல புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிவரும். நண்பர்கள் வகையில் விரோதம் உண்டாக வாய்ப்புணடு. உறவினர்களோடு சுமுக உறவு ஏற்படும். கடன் பிரச்சனையில் மாட்டி கொள்ளாமல் இருப்பது உத்தமம். பிரியமானவர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்கள் முடியாத இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும் | கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே உங்கள் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களால் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை அமையும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். மனைவி மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கும். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். மன அமைதியை பெற தினமும் தியானம் செய்யவும். உத்தியோகத்தில் மேல் அதிகார்களின் பாராட்டும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பரிகாரம் : அம்பாளை வணங்கி வழிபடவும் |
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் வாழ்க்கை தரம் படிப்படியாக மாறும். பொருளாதார வளம் கூடும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனசங்கடம் வராமல் இருக்க குல தெய்வத்தை வழிபடவும். காரியத்தடை விலகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரும். பயணங்களில் கவனம் தேவை. மனைவியிடம் தொழில் தொடர்பான ஆலோசனைகளை கேட்கலாம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. உங்களை சுற்றி இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் உங்கள் தனி திறமை வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும் | கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் எதிர்பார்க்காத உதவிகள் தானாகவே தேடி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அன்பு ஆதரவு அதிகமாகவே இருக்கும், பண வரவு அதிகரிக்கும், ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும், உங்களின் பேச்சு திறன் அதிகமாகும். எந்த முயற்சி மேற்கொண்டாலும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உடன்பிறப்பு வகையில் உதவி கிடைக்கும். உடல் உபாதைகள் படி படியாக குறையும். பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணம் ஏற்படும். சிறிய முதலீட்டில் புது தொழில் யோகம் அமையும். பரிகாரம் : மஹா விஷ்ணுவை வழிபடவும் |
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புது முயற்சிகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டிவரும். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உங்களை விரும்பாதவர்கள் சிலர் பின் தள்ளி உங்களை முந்தி செல்ல நினைப்பவர்கள். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய நல்ல செயல்களால் பெயர் புகழ் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரியமானவர்கள் வழியில் நன்மை கிடைக்கும். பெண்கள் வகையில் சில அனுகூலம் உண்டு. புதிய நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்பார்த்த பணம் சில தடங்கலுக்கு பின் கைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமை இருக்கும். பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும் | விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் நினைத்திருந்த விஷயம் எளிதில் முடியும். பல எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் பெயரை நிலை நாட்டுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கை கூடும். பயணங்களால் நன்மை உண்டாகும். சிந்தித்து செயல்படுவதால் பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் உங்கள் தலைமையில் நடக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது. பக்தி உணர்வு மேம்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய தொழில் அதிக லாபத்தை பெற்று தரும். பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும் |
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உயரும். வர வேண்டிய பண பாக்கி சரியான நேரத்தில் வந்து சேரும். உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய முற்சிகள் மூலம் பல வெற்றிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் நடைபெறும். பண வரவு உண்டு. குடும்ப சிக்கல்கள் பிரச்சனைகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியது இருக்கும். உடன்பிறப்பு வகையில் சில ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு. கூட்டு தொழிலில் மிதமான லாபம் கிடைக்கும். பரிகாரம் : குரு பகவானை வழிபடவும் | மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உயரும். வர வேண்டிய பண பாக்கி சரியான நேரத்தில் வந்து சேரும். உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய முற்சிகள் மூலம் பல வெற்றிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்சிகள் நடைபெறும். பண வரவு உண்டு. குடும்ப சிக்கல்கள் பிரச்சனைகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியது இருக்கும். உடன்பிறப்பு வகையில் சில ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பரிகாரம் : குரு பகவானை வழிபடவும் |
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எண்ணி வாழ்பவர்கள் நீங்கள். உங்களிடம் அபரிதமான திறமை இருக்கும். செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் வெகுவாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாக பழகவும். தொழில், வியபாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பரிகாரம் : விநாயகரை வழிபடவும் | மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புது திட்டங்கள் சம்பந்தமாக நிறைய நபர்களை சந்திக்க வேண்டியது இருக்கும். மன நிம்மதிக்காக ஆலயம் சென்று வழிபடவும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும், பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தால் செலவுகள் ஏற்படலாம். ஒரு சில விஷயங்களில் குடும்பத்தினரை அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. உங்களது பெயர் புகழ் கீர்த்தி விருத்தி அடையும். பெண்களால் சில தொந்தரவுகள் வரும். உங்களது செயல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். . பரிகாரம் : சாஸ்தாவை வழிபடவும் |
06 ஜூலை 2025 – ஞாயிறு | முஹர்ரம் பண்டிகை
ஜூலை 2025 சுபமுகூர்த்த நாட்கள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
ஜூலை 2025 தமிழ் திருமண தேதிகள்
Date | Month | Year | Day | Pirai |
02 18 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Valarpirai வளர்பிறை |
07 23 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Valarpirai வளர்பிறை |
13 29 | July ஆனி | 2025 விசுவாசுவ | Sunday ஞாயிறு | Theipirai தேய்பிறை |
14 30 | July ஆனி | 2025 விசுவாசுவ | Monday திங்கள் | Theipirai தேய்பிறை |
16 32 | July ஆனி | 2025 விசுவாசுவ | Wednesday புதன் | Theipirai தேய்பிறை |
பண்டிகைகள் ஜூலை 2025 |
Jul 02 – Wed – ஆனி உத்திர தரிசனம் |
Jul 28 – Mon – ஆடிப்பூரம் |
- ஜூலை 2025 விசேஷங்கள் :
ஜூலை 01 (செ) சிதம்பரம் சிவன் தேர்
ஜூலை 02 (பு) ஆனி உத்திரம்
ஜூலை 04 (வெ) விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 05 (ச) ராமநாதபுரத்தில் தேர்
ஜூலை 06 (ஞா) மொகரம்
ஜூலை 07 (தி) கண்டமாதேவி, திருக்கோளக்குடி, கானாடுகாத்தான் சிவன் தேர்
ஜூலை 08 (செ) நெல்லையப்பர் தேர்
ஜூலை 10 (வி) சாத்தூர் பெருமாள் தேர்
ஜூலை 12 (ச) திருத்தங்கல் தேர்
ஜூலை 16 (பு) தட்சிணாயண புண்ணிய காலம்
ஜூலை 20 (ஞா) ஆடி கிருத்திகை
ஜூலை 24 (வி) ஆடி அமாவாசை
ஜூலை 27 (ஞா) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்
ஜூலை 28 (தி) நாக சதுர்த்தி
ஜூலை 28 (தி) ஆடிப்பூரம்
ஜூலை 28 (தி) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஜூலை 29 (செ) கருட பஞ்சமி