மெல்போர்னின் அல்டோனா மெடோவ்ஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய மாணவர் சவுரப் ஆனந்த், 33, கடந்த 19ம் தேதி இரவு அங்கு உள்ள மருந்தகத்திற்கு சென்றுவிட்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை ஐந்து சிறுவர்கள் வழிமறித்துள்ளனர்.

ஒருவர் அவரது பாக்கெட்டுக்குள் கை விட்டுள்ளார். சவுரப் அவரை தள்ளிவிட முயன்ற போது, மற்றொரு சிறுவன் கத்தியை எடுத்து சவுரபின் கழுத்துக்கு நேரே கொண்டு வந்துள்ளான். அதை தடுக்க சவுரப் கையை குறுக்கே நீட்டிஉள்ளார்.
இதில் கை மணிக்கட்டில் கத்தி பாய்ந்தது. அதே இடத்தில் கத்தியால் மூன்று முறை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.
கடும் வலியில் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிரை காக்க முதலில் கையை அகற்ற முடிவு செய்த டாக்டர்கள், அதன் பின் கடும் முயற்சி செய் து கையை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை செய்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்; ஒருவரை தேடி வருகின்றனர்.