இன்றைய ராசி பலன் 23 பிப்ரவரி 2026 திங்கள்

| தமிழ் நாட்காட்டி பிப்ரவரி 2026 | |
|---|---|
| அமாவாசை | 17-பிப்ரவரி-2026 செவ்வாய் |
| பௌர்ணமி | 01-பிப்ரவரி-2026 ஞாயிறு |
| கார்த்திகை | 23-பிப்ரவரி-2026 திங்கள் |
| சஷ்டி விரதம் | 22-பிப்ரவரி-2026 ஞாயிறு |
| சங்கடஹர சதுர்த்தி | 05-பிப்ரவரி-2026 வியாழன் |
| சதுர்த்தி | 21-பிப்ரவரி-2026 சனிக்கிழமை |
| பிரதோஷம் | 14-பிப்ரவரி-2026 சனிக்கிழமை |
| திருவோணம் | 16-பிப்ரவரி-2026 திங்கள் |
| மாத சிவராத்திரி | 15-பிப்ரவரி-2026 ஞாயிறு |
| ஏகாதசி | 13-பிப்ரவரி-2026 வெள்ளி 27-பிப்ரவரி-2026 வெள்ளி |
| அஷ்டமி | 09-பிப்ரவரி-2026 திங்கள் 24-பிப்ரவரி-2026 செவ்வாய் |
| நவமி | 10-பிப்ரவரி-2026 செவ்வாய் 25-பிப்ரவரி-2026 புதன் |
| அரசு விடுமுறை நாட்கள் | 01-Feb-2026 Sunday தைப்பூசம் |
| திருமண நாட்கள் | 06-பிப்-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 08-பிப்-2026 ஞாயிறு தேய்பிறை 13-பிப்-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 15-பிப்-2026 ஞாயிறு தேய்பிறை 16-பிப்-2026 திங்கட்கிழமை தேய்பிறை 20-பிப்-2026 வெள்ளிக்கிழமை வளர்பிறை |
| திருவிழாக்கள் | 01-பிப்-2026 ஞாயிறு தைப்பூசம் 15-பிப்-2026 ஞாயிறு மஹாசிவராத்திரி |
இன்றைய ராசி பலன் 23 பிப்ரவரி 2026 திங்கள்

மேஷ ராசி நேயர்களே, மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகாரிக்கும். தடைப்பட்டு வந்த காரியம் இனிதே நடைபெறும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சிக்கலை பேசி சரி செய்து கொள்ளவும். பண நெருக்கடி நாளடைவில் சீராகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி நேயர்களே, நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். எதிரிகள் சரணடைவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கடக ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் தள்ளி வைக்கவும். பொருளாதார வளர்ச்சி இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பொது காரியங்கள் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் ஆர்வம் பிறக்கும்.

கன்னி ராசி அன்பர்களே, சுப செய்திகளால் மனம் குளிரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எதிரிகளின் பலவீனம் அறிந்து செயல்படவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே, அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்த முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப வருமானம் கணிசமாக உயரும். உறவினர்கள் பாச மழை பொழிவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் கௌரவம் உயரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகர ராசி அன்பர்களே, குடும்ப சூழ்நிலை சாதகமாக அமையும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் வேண்டாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். மறைமுகப் பிரச்சனைகள் வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் அனுசரித்து போக வேண்டியிருக்கும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 23-02-2026 To 01-03-2026

மேஷ ராசி அன்பர்களே,
இந்த வார பலன்படி, குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திட்டமிட்டபடி காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். உத்யோகம் தொடர்பான அலைச்சல் இருக்கும் தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்

ரிஷப ராசி அன்பர்களே,
இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். மனத்தெம்பு உண்டாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் சின்ன மனஸ்தாபம் வரும். புது நபர்களுடன் பழகும் பொது கவனம் தேவை. குடும்பத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.

மிதுன ராசி அன்பர்களே,
இந்த வார பலன்படி, குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர் கூட ஒதுங்கி நிற்பர். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு தொந்தரவும் இருக்காது. நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த முயற்சி மேற்கொண்டாலும் அதை திறமையாக முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே,
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பாராத விவாதமாக புதிய நபர்களை சந்திக்க வேண்டி வரும். மனதில் இருந்த குழப்பங்களும், கவலைகளும் நாளடைவில் சீராகும். சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். தான, தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். உடல் நலம் சீராகும். பிரபலங்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். வீட்டு பாமரிப்பு செலவுகள் கூடும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே உங்கள் எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே,
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். ஆன்மிகப் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். வாக்குவாதங்களையும், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நிதானமான செயல்பாடுகளால் காரிய வெற்றி உண்டாகும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். அடிக்கடி செல்லும் பயணங்களால் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : ஒரு முறை சூரியனார் கோவில் சென்று வரவும்.

கன்னி ராசி அன்பர்களே,
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். எதிர்பார்ப்புக்கு தகுந்தோர் போல் ஒருவர் அறிமுகமாவார். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். குடும்பத்தில் ஆதரவு பெருகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். மனதில் பல புதிய திட்டங்கள் தோன்றி அதை செயல்படுத்த வழி கிடைக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே,
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவு அவ்வப்போது இருக்கும். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரித்தால் மகிழ்ச்சி கூடும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்

விருச்சிக ராசி அன்பர்களே,
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். மனதில் நினைத்திருந்த விஷயம் கூட எளிதில் முடியும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நிலவி வந்த இக்கட்டான சூழல் நிலவும். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். பயணங்களால் நன்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்

தனுசு ராசி அன்பர்களே,
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல அரிதான விஷயங்கள் நடக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். வரும் எதிர்ப்புகளை கூட தைரியமாக சமாளிக்க முடியும். குடும்ப நபர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்னை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வாகனங்களில் செல்லும்போது பொறுமை அவசியம். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

மகர ராசி அன்பர்களே,
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சு திறமையால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். பொருளாதார வளம் மேம்படும். மனதில் இருந்த கவலை நீங்கும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம். குடும்பத்தில் வரும் பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். உடனிருப்பவர்களுடன் கவனமாகப் பழகவும். பழைய இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது பல செயல்கள் காரணமாக சமூகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். குடும்ப மருத்துவரிடம் உடல் நலத்தை பரிசோதித்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்.

கும்பம் ராசி அன்பர்களே,
கும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். பொருளாதார வளம் கூடும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். நேர்மையான எண்ணங்களும், சிந்தனைகளும் உங்களை பெரியளவில் உயர்த்தும். நண்பர்கள் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். பெரியோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. குடும்பத்தில் பொறுமையுடனும் கவனமுடனும் செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே,
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எப்போதும் இல்லாத சந்தோஷம் ஏற்படும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். புது நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உறவினர்களிடம் இருந்த பகைமை நிலை நீங்கும். கணவன் மனைவிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெரியோர்களிடம் உங்கள் குறைகளை சொல்லவும். குடும்பத்தில் எதிர்பாராத பல செலவுகள் வரும். உத்யோகத்தில் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.
பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026
| பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 |
| 2026 – பிப்ரவரி மாத ராசி பலன்கள் விசுவாவசு ஆண்டு தை மாதம் 18ம் தேதி முதல் மாசி மாதம் 16ம் தேதி வரை (01-02-2026 – 29-02-2026) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-01-2026 முதல் 29-02-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. பிப்ரவரி மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : பிப்ரவரி 3 புதன் ராகுவுடன் சேர்ந்து கும்ப ராசியில் பயணம் செய்கிறார் பிப்ரவரி 6 செவ்வாய் மகர ராசியில், சூரியனுடன் இணைகிறார் பிப்ரவரி 13 சூரியன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் பிப்ரவரி 17 சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ” ஆலந்தூர் ” A. வினோத் குமார், Ph.d Astrology |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுப்பரில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர்கள் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் சூழ்நிலை வரும். மனதிற்க்குப் பிடித்தமானவர்களை சந்திக்க நேரிடும். முக்கிய நபர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. குடும்பத்தில் முக்கிய வேலைகளை முடிக்க வேண்டிவரும். பண வரவு ஒரு புறம் இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வரும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் மிகவும் அவசியம். பெற்றோர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். உத்யோகம் தொடர்பாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்தும் முயற்சிகள் நிறைவேறும். உங்களின் நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடியதாக அமையும். உங்கள் எண்ணத்திற்கு ஏற்றபடி எல்லாம் வெகு சிறப்பாக அமையும். உறவினர்கள் மூலம் நன்மைகளை பெற்றிடலாம். குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய முடியும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. முக்கிய காரியங்களை தாமதிக்காமல் உடனுக்குடன் செய்து முடிக்கவும். இஷ்ட தெய்வ அருளால், மனதில் நினைத்தது நடக்கும். பணவரவு ஒரு சில தடைக்கு பின் கைக்கு வரும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை முடிந்தவரை தவிர்க்க பார்க்கவும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். புது வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க முடியும். பெற்றோர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும் பெரியளவில் பாதிக்காது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க சிறிது தாமதமாகலாம். குடும்பத்துடன் பல முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டிவரும். வெளிநாட்டில் வேலை தொடர்பான முயற்சிகளுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ள காலமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம், இரக்கம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 12,13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் புதிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குடும்ப வாழ்வில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். எந்த சூழ்நிலையையும் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். விருப்பங்கள் நிறைவேறும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு ஒரு தற்காலிக விடிவு பிறக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது முக்கியம். உடல் உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் இருக்கும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும். தூரத்து பயணங்களின் போது கவனமுடன் இருக்கவும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கைத் தரும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்ய முடியும். உங்களை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் பாராட்டி பேசுவர். புது வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். அடிக்கடி பயணங்களும், அலைச்சல்களும் தவிர்க்க முடியாது. குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. கணவர் மனைவிடையே கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதில் பழைய நினைவுகள் தொந்தரவு தரும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்களுக்கு எதிராக சில எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும். குல தெய்வ வழிபாடு சிறப்பை தரும், மனம் மற்றும் பண கஷ்டத்தை சீக்கிரத்தில் போக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு. எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். சிறு விஷயங்களுக்காகக்கூட அதிக அலைச்சலும், முயற்சியும் தேவைப்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் ஒருவரால் மன நிம்மதி பாதிக்கப்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். குடும்ப பிரச்னை சுமூகமான தீர்வு பெறும். அனாவசியமாக யாருக்கும் வாக்குறுதிகள் கொடுத்து பிரச்சனையில் சிக்கி கொள்ள வேண்டாம். வெளி இடங்களில் குடும்ப விவகாரங்கள் பற்றி பேசாமல் இருக்கவும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவிடையே ஒற்றுமை நிலவும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவும். வேலை மாற முயற்சி செய்யக்கூடியவர்களுக்கு முயற்சிகள் நல்ல வாய்ப்பை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரிய வரும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். பொருளாதார பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. எதிலும் பொறுமை நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். திருமண காரியம் கைகூடும். புதிய முயற்சிகளுக்கு, மிகவும் சாதகமான மாதம் இது. அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குடும்ப விவகாரங்களில் கவனத்துடன் இருப்பது ரொம்ப அவசியம். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். பிரிந்து சென்ற உறவினர்கள் உங்களை நாடி வருவர். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதிற்கு புத்துணர்ச்சி தரும். குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். உடல் நலம் சிறப்படையும். உடன்பிறப்புகளிடையே இருந்த சண்டை சச்சரவு நீங்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பெரியோர்களின் ஆலோசனைகளும் உதவியும் உறுதுணையாக இருக்கும். குடும்பத்தில் தங்களின் மதிப்பும், மரியாதையும் தானாகவே உயரும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். .
சந்திராஷ்டமம் : 19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். மனோபலம் அதிகரிக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். தடைகள் பிரச்னைகள் குறைந்து எளிதாக எதுவும் நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறப்புகள் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். எதிரிகளால் சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக வங்கியில் கடன் பெற முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். குடும்ப வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். சிலருக்கு, வீடு மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. தர்ம காரியங்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முக்கிய காரியங்களுக்கும் அவசரம் காட்ட வேண்டாம், பொறுமையாக காத்திருக்கவும். பணம் விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். பயணங்களால் மன நிம்மதியும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடி வரும். அடுத்தவர்கள் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். கணவர் மனைவிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் இழுபறி நிலை நீடிக்கும். பெரியோர்களின் ஆசி கிட்டும். ஒரு சிலர் பழைய தீர்க்க முடியாத பிரச்சனைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். நீண்ட நாளாக வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 21,22,23 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் கடினமான உழைப்புக்கு தக்க சன்மானம் கிடைக்கும். இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் விலகும். எதிலும் சுயமாக சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் வளைந்து கொடுத்துச் போவது நல்லது. ஏற்றத்தாழ்வு இருந்தாலும் தேவைக்கேற்ப பொருளாதார நிலை இருக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்வில் சிறுசிறு தடைகள் பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து விட முடியும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் நிதி தொடர்பான வாய்ப்புகள் வலுவாக இருக்கும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். மனப்பிரச்னைகள் விலகும். சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். நெருங்கிய நண்பர்களால் ஒரு சில இடையூறுகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். குடியிருக்கும் வீட்டினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிவரும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். திருமண காரியம் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 23,24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் வரவும் செலவும் சமமாகவே இருக்கும். வெளியிடங்களில் உங்கள் பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும். பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்ப இருக்கும். தேவையற்ற மனக்கவலையை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் ஜெயிக்க முடியும். அண்டை அயலார் உதவிகரமாக இருப்பர். உற்றார், உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிரச்னைகள் பல வந்தாலும் மனத் துணிவுடன் சமாளிக்க முடியும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். அதிக அலைச்சலும், உடல் உழைப்பும் சோர்வை ஏற்படுத்தும். உங்களை சுற்றி இருப்பவர்களின் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களிடம் வரம்பு மீறி செல்ல வேண்டாம். ணவர் மனைவியிடையே நல்ல ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். அத்தியாவசியத் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். எண்ணிய எண்ணங்கள், நீண்ட நாள் ஆசைகள் விடாமுயற்சியால் நிறைவேறும்.எத்தனை தடைகள் வந்தாலும் அதை எல்லாம் வென்று வெற்றி பெற முடியும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வீண் விரயங்கள் மருத்துவ செலவினங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை தோன்றும். எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் வீட்டினில் புதிய பொருட்கள் சேரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். பிரியமானவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கடன் சுமைகள் இப்போது பாதியாக குறையும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம் : 1,2 & 28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் அனுபவ அறிவை கொண்டு பல காரியங்களில் ஜெயிக்க முடியும். மனதில் புதிய நம்பிக்கை வளரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நிறைவு ஏற்படும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் தற்போது கை வந்து சேரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும் எதிரிகளால் பிரச்னை வந்தாலும் சமாளித்து விட முடியும். உங்கள் திறமைக்கு ஏற்ற சவால்களை சந்திக்க நேரிடும். புத்தி சாதூர்யத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் பல தரப்பட்ட இடையூறுகளை சமாளிக்க வேண்டிவரும். உங்களுடைய காரியங்களை எல்லாம் வெற்றிகரமாக முடிக்க முடியும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி ஏற்படும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டு. பயணங்களின் போதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கடன் தொந்தரவு அவ்வப்போது இருக்கும். பெற்றோர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தில் தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றமும், லாபத்திற்கான வாய்ப்புகளையும் பெற்றிடலாம்.
சந்திராஷ்டமம் : 2,3,4,5 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் சக்திக்கு மீறிய, வாக்குறுதிகளை யாருக்கும் தர வேண்டாம். பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவது, போன்ற தவறுகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். திருமண தொடர்பான காரியங்களை தள்ளி போடுவது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கையாக இருக்கவும். அதிக அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது..உங்கள் மனதை பல நாட்களாக வாட்டி கொண்டு இருந்த விஷயங்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். உங்களை சுற்ற இருப்பவர்களின் நலனில் அக்கறை எடுத்து கொள்வது முக்கியம். பிறர் செய்யத் தயங்கும் செயல்களைக் கூட தைரியமாக எடுத்து செய்ய முடியும். விஐபிகளின் அறிமுகமும், அரவர்களால் நன்மையும் உண்டாகும். உடல் நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம். சொத்துக்களில் நிலவிய பிரச்சனைகள் இழுபறியில் நீடித்து இருக்கும். பெற்றோர்கள் வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். கணவன் மனைவிடையே அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கொடுக்கல், வாங்கலில் தற்காலம் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் பல நன்மைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களை சுற்று இருப்பவர்களால் நன்மை வந்து சேரும். மனதில் துணிச்சல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட, அதிக முயற்சியும், அலைச்சலும் தேவைப்படும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமை பாதிக்கப்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், நல்ல வரன் அமையும். நெருக்கமானவர்களின் திடீர் சந்திப்பு மனதிற்கு உற்சாகத்தைத் தரும். பிரியமானவர்கள் உதவிகரமாய் செயல்படுவர். சொத்து விவகாரத்தில் பல இடையூறுகளை சந்திக்க வேண்டிவரும். ஆடம்பர செலவுகள் கூடும். ஏற்கனவே வாங்கிய பழைய கடனை அடைப்பதற்கு சில சந்தர்ப்பங்கள் வரும். குடும்பத்தில் சில எதிர்பாராத சில பிரச்சனைகள் வரும். தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தவும். கணவன் மனைவி உறவுகளில் மற்றவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களை ஓட்டும்போது, நிதானமாகவும், கவனமாகவும் இருத்தல் அவசியம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 7,8,9,10 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
