யாழ்ப்பாணம், மரதங்கேனி, வத்திராய பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (31.07.2025) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2.16 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் நெல்லியடி விஷேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
108 கிலோகிராம் (54 பார்சல்கள்) கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மரதங்கேணி பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.