எத்தனையோ விதவிதமான புடவைகள் வந்தாலும் பட்டுப் புடவைக்கு இருக்கும் மவுசே தனி தான். ஆனால், அந்தப் பட்டுப் புடவைகளில் ஏதேனும் கறை படிந்துவிட்டால், அவ்வளவுதான் பெண்கள் கலங்கிவிடுவார்கள்.

உண்மையில் பட்டுப் புடவைகளில் படிந்துள்ள கறைகளை எளிதாக நீக்கிவிடலாம்.
சமையல் செய்யும்போது அல்லது பூஜை அறையில் இருக்கும்போது உங்கள் பட்டுப் புடவையில் எண்ணெய்க் கறை பட்டுவிட்டால் உடனே ஈரமற்ற சுத்தமான கொட்டன் துணியைக் கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.
ஆனால், அந்த இடத்தை அழுத்தி தேய்க்காமல் கவனமாக இதனைச் செய்ய வேண்டும். பின் அந்த இடத்தில சற்று பவுடர் தூவி சுத்தம் செய்து, கறைபட்ட இடத்தை ஓடும் நீரில் அலச வேண்டும்.
இவ்வாறு செய்தால் எண்ணெய்க் கறை நீங்கிவிடும். இதற்கு சுடு தண்ணீர் உபயோகிக்கக் கூடாது.
அதேபோல் லிக்விட் சவர்க்காரத்தை குளிர்ச்சியான நீரில் கரைத்து அதில் சுத்தமான கொட்டன் துணியை நனைத்துக்கொள்ள வுண்டும். பின் கறை படிந்துள்ள இடத்தின் மேல் வைத்து மெதுவாக தேய்க்க வேண்டும்.
🚩 பொறுப்புத் துறப்பு.
⚠️ அமிழ்து வலைத்தளம் அழகு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். எந்தவொரு புதிய தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளையும் முயற்சிக்கும் முன் தோல் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரை அணுகவும்.
⚠️இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகள் அல்லது விளைவுகளுக்கும் நாங்கள் (அமிழ்து) பொறுப்பல்ல.