தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடவுப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற
சீமான் பேசியதாவது:
இலங்கையில் எங்களை குண்டு போட்டு கொன்றார்கள், அது இனப்படுகொலை. இங்கு குடிக்க வைத்து கொல்கிறான், இதுவும் இனப்படுகொலை.

அவன் ஒன்றரை லட்சம் பேரை ஒரே ஆண்டில் கொன்றான். – இவன் 5 லட்சம் பேரை 5 ஆண்டில் கொல்கிறான். இரண்டும் ஒன்றுதான்.
இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் ஆக சிறந்த நாடாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள் எல்லாம், கோடி கனவுகள் கொண்டோம்.
அதனை நிறைவேற்ற கூடி வாருங்கள், ஓடி வாருங்கள் என் மக்களே. அவங்களுக்கு தெரியாது. ஆடு, மாடு என்றால் என்ன என்று நினைத்து கொண்டு இருக்கிறான். ஆடு, மாடுகள் மேய்ப்பது தொழில்முறைகள் அல்ல; எங்களது வாழ்க்கை முறை, கலாசாரம், பண்பாடு.
மாட்டுப்பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள். கூரிய கொம்புகள் இருப்பதை மறந்து மாடுகள் வண்டி இழுத்துக் கொண்டிருக்கின்றன; மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மேய்ச்சல் நிலம் என்பது எங்களது உரிமை. ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மை பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.