தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், அவற்றின் சின்னம்; பதிவு பெற்ற, அதேநேரத்தில் அங்கீகாரம் பெறாத கட்சிகள் விபரத்தை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளாக, ஆம் ஆத்மி, அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., – தி.மு.க., – காங்கிரஸ் – நா.த.க., – தேசிய மக்கள் கட்சி – வி.சி.க., போன்றவை உள்ளன.
பதிவு செய்து, அங்கீகாரம் பெறாத கட்சிகளாக, 295 கட்சிகள் உள்ளன. இவற்றில், பா.ம.க., – த.வெ.க., போன்றவை இடம் பெற்றுள்ளன.