முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கினிகத்தேன பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கினிகத்தேன – பிளக்வோட்டர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரும் முச்சக்கரவண்டியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களான இளைஞர்களிடமிருந்து, பொதிகளாக்கப்பட்ட ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரும் இன்று புதன்கிழமை (17.09.2025) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.