ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே டிப்பர் லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.

மணல் ஏற்றி வந்த லாரி தவறான பாதையில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ”இந்த சம்பவம் தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.