“மூளையை உண்ணும் அமீபா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது,” பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இதுவரை மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு உள்ளது.

மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட நீரில் குளிப்பது அல்லது அதில் முகத்தை கழுவுவதன் வாயிலாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி போன்ற அமீபிக் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தொற்றால் இதுவரை 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மருத்துவமனைகள் உஷார் படுத்தப்பட்டு இந்தத் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *