அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில், 8; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார், 7; கரூர், கடலுார் மாவட்டம் லக்கூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார், மதுரை மாவட்டம் குப்பணம்பட்டி பகுதியில், தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் வரும் 16ம் தேதி வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.