மருதாணி என்றாலே எல்லா பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. பல்வேறு வகையான விழாக்கள், திருமண நிகழ்வுகளின் போது பண்டையகாலம் தொட்டே இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொள்வது பாரம்பரியமான பழக்கமாக இருந்து வருகிறது.

பெண்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளங்கைகளில் பல்வேறு வடிவங்களில் மருதாணி இட்டு கொள்வது வழக்கம். அதிலும் மணப்பெண்களுக்கு கை விரல்கள் முதல் முழங்கை வரை ஹெனா எனப்படும் மருதாணியும் இட்டு கொள்வர்.
மருதாணி அலங்காரத்தில் பல வேறுபாடுகள் மற்றும் வகைகள் உள்ளன. இவற்றுள் பிரதானமாக அராபிய மருதாணி வடிவம், இந்திய மருதாணி வடிவம் மற்றும் பாகிஸ்தானிய மருதாணி வடிவம் போன்றவற்றைக் குறிப்பிடாலாம். பெண்கள் தமது கைகள் மற்றும் கால்களுக்கு பல்வேறு விதமான மருதாணி அலங்கார வடிவங்களை இடுவார்கள்.

வெண்மையான பெண்களுக்கு மருதாணி அலங்காரம் மிகவும் தெளிவாக விழங்கக்கூடியது. இயற்கையிலே, மருதாணியில் மெலனின் அளவு குறைவாக இருக்கின்றது. பெரும்பாலும் முஸ்லிம் பெண்கள் மருதாணியை அதிகம் விரும்புவர்.
மருதாணியின் இருக்ககூடிய சில அறிவியல் சார்ந்த விடயங்களை பார்க்கலாம்.
மருதாணி குளிர்ச்சித் தன்மை கொண்டது. இவற்றை கைகளில் இட்டுக் கொள்வதால் உடலில் குளிர்ச்சித் தன்மை கூடும்.
இரத்த ஓட்டம் சீராகும். இதய படபடப்பு, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மன அழுத்தம் குறையும்.
சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சணை இருக்கும் இவர்கள் அடிக்கடி மருதாணி இட்டுக் கொண்டால் தலைவலி சரியாகிவிடும்.
மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் உடல் சூடு குறையும். இதனால் சரும நோய்கள் வயிற்று உபாதைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மருதாணி வைத்துக் கொள்வதால் நகத்தின் இடுக்குகளில் சேரும் அழுக்கு மற்றும் அதில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்கிறது.
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்க பெண்கள் மருதாணி வைத்துக் கொள்வது நல்லது.
அதேபோல வெள்ளைப்படுதலுக்கு மருதாணி நல்ல தீர்வாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் மருதாணியை அரைத்து கால்களில் பூசிக் கொண்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். கால் எரிச்சல் பிரச்சணை சரியாகும்.

🚩 பொறுப்புத் துறப்பு.
⚠️ அமிழ்து வலைத்தளம் அழகு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். எந்தவொரு புதிய தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளையும் முயற்சிக்கும் முன் தோல் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரை அணுகவும்.
⚠️இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகள் அல்லது விளைவுகளுக்கும் நாங்கள் (அமிழ்து) பொறுப்பல்ல.