
அமெரிக்க குடியுரிமை.. அதிபர் ட்ரம்ப் போட்ட முக்கிய உத்தரவு.. மருத்துவமனையில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!
அமெரிக்கா அல்லாத பிற நாட்டவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பது தடை செய்யும் சட்ட உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பதில் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் டிரம்ப். அதில் அமெரிக்கா வாழ் இந்தியர்களை மிகவும் பாதித்த ஒன்று பிறப்புரிமை அடிப்படையில் இனி யாரும் அமெரிக்க குடியுரிமையை பெற முடியாது என்ற அறிவிப்பு தான். இந்த உத்தரவின் மூலம் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அங்கு குடியுரிமை கிடைக்காது என்பது தான்.
பகிரவும்: