
கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு.
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில் இடம்பெறுபவர்கள் இருக்கின்றார்கள்.
இந்தவகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில், தமிழீழத்தின் வரலாற்றில் ஏன் தமிழினத்தின் வரலாற்றிலேயே இடம்பெறக்கூடிய அளவிற்கு சாதனைகள் பல புரிந்தவர் கேணல் கிட்டு.
இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் வணக்க நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டது. நிகழ்வில் பொதுச்சுடரினை நடன ஆசிரியை சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். தமிழீழ தேசிய கொடியை பிரித்தானிய கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர்
திரு கண்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகைச்சுடரினை நீண்ட கால பணியாளர்
நீதவான் கெங்கா அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அகவணக்கத்தினை தொடர்ந்து திருஉருவபடத்திற்கு மலர்மாலையினை லெப் கேணல் சுடர்ணன்அவர்களின் சகோதரன் சுகந்தன் அவர்கள் அணிவித்தார்கள். நிகழ்வில் தொடர்ந்து மலர்வணக்கமும் , நடன நிகழ்வுகளும்,நினைவுப்பகிர்வும் மற்றும் கவிதை நிகழ்வுகளும் இண்டம்பெற்றது.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் (ஒலி வடிவம்) ஒலிக்கப்பட்டு தமிழீழ தேசிய கொடி கையேந்தல் இடம்பெற்றது. உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.
















பகிரவும்: