வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு : வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்குறிப்பிட்ட சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளைகளில் மழை பெய்யலாம்.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை : இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொழும்பு முதல் மாத்தறை வரையான கடற்பரப்பில் மழை
கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலி வழியாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளிலும் மழை பொழியும்.
காற்றின் நிலை: பொதுவாக, கடற்பரப்புகளில் காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25-35 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.
இருப்பினும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை: மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இந்த பகுதிகளில் கடல் பயணத்தில் ஈடுபடுவோர் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.