உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது அர்ஜென்டினா (1978, 1986, 2022). இதையடுத்து கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டி நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) உலக கால்பந்து சாம்பியன் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடுவதை உறுதி செய்துள்ளது.

இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெஸ்ஸியின் இந்திய பயணத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
