அதே நேரத்தில் ஒரு மாணவர் மீட்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கி காணாமல் போன இருவரும் பாணந்துறை, எலுவில மற்றும் ஹொரணை, கல்பத்த ஆகிய இடங்களைச் சேர்ந்த 15 வயதுடைய மிஹின் சன்ஹிந்த மற்றும் நெதும் நெத்சரா என்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் ஆவர்.
ஹொரணையில் உள்ள ஒரு பாடசாலையில் படித்து வரும் மூவரும், கலமுல்ல, புனித அந்தோணியர் மாவத்தையின் முடிவில் தனியார் கல்வி வகுப்பில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை கடற்படை உயிர்காப்பாளர்கள் மற்றும் பயாகல பொலிஸாருடன் மீனவர்களும் இணைந்து காணாமல் போன இரண்டு பாடசாலை மாணவர்களை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.