
நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை தூக்கிட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் இன்றைய தினம் (ஜனவரி 27) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
”மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு, கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மாங்குளம் போலீஸார், 48 வயதான பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பகிரவும்: