ஹார்மோன் காரணமாக சில பெண்களின் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

சில பெண்களுக்கு மீசையும் தாடியும் இருப்பதோடு நெற்றியில் முடிகளும் அதிகளவில் இருக்கும்.
முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு இயற்கை முறையில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்…
தேவையான பொருட்கள்
- கடலைமாவு- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில், கடலைமாவு கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் அதனை முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்களுக்கு உலர விடவும்.
- பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
- முகத்தை கழுவும்போது முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும்.

இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நிரந்தரமாக நீக்கி விடும்.
🚩 பொறுப்புத் துறப்பு.
⚠️ அமிழ்து வலைத்தளம் அழகு குறிப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்குகிறது. தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். எந்தவொரு புதிய தயாரிப்புகள் அல்லது சிகிச்சைகளையும் முயற்சிக்கும் முன் தோல் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரை அணுகவும்.
⚠️இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அல்லது தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகள் அல்லது விளைவுகளுக்கும் நாங்கள் (அமிழ்து) பொறுப்பல்ல.
மங்கையர் உலகம்