ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

0
Ananda Wijepala

இந்நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிடத்தை வியாழக்கிழமை (04.09.2025) திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது.அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம்.நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும்.

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படும் என்றார்.

உலகளவில் பரப்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *