யாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதல்.

யாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில்,

யாழ். மாவட்டம்  மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “முல்லை மாவட்ட கடற்புலிகளின் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி மேஜர் அன்பு / அந்தமான், கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா / சிவம்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள்.

கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி,  கடற்கரும்புலி கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும்,

“கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி  கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்காமூடித” மீதும் தமது கரும்புலித் தாக்குதலைத் தொடுத்தனர்.

கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரும்புலி மேஜர் அன்பு | 20.09.1995

கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் | 20.09.1995

கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) | 20.09.1995

கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி | 20.09.1995


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *