Monday, November 9, 2026
Home செய்திகள்தமிழீழம்எம்.கே. சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்.கே. சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

by Amizhthu

பருத்தித்துறை | 04.11.2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை செவ்வாய்க்கிழமை (3) திடீரென மீண்டும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment