மொனராகலை – மாத்தறை பிரதான வீதியில் 70வது வீதி சந்திக்கு அருகில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
லுனுகம்வெஹெர நோக்கிச் சென்ற பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் தணமல்வில பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் லுனுகம்வெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.