கானல் நீதி – The Unending Search for Justice – 06.10.2025
நீதியின் தேடலில் தொலைந்த Dr. மனோகரன் அவர்களையும், இன்றுவரை நீதி மறுக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் – கானல் நீதி – The Unending Search for Justice

காலம் – 06.10.2025
நேரம் – காலை 10 மணி
இடம் – தந்தை செல்வா கேட்போர் கூடம், யாழ்ப்பாணம்
ஒழுங்கமைப்பு – மக்கள் செயல் PEOPLE’S ACTION
ஊடக அறிக்கை

மக்கள் செயல் | PEOPLE’S ACTION
கானல் நீதி
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 2006.01.02 ஆம் திகதியன்று திருகோணமலை நகரத்தின் காந்தி சிலையருகில் வைத்துப் படுகொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கு நீதிகோரி போராடிவந்த, படுகொலையான மாணவரான ரஜிகரின் தந்தையார் மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் அவர்கள் அண்மையில் அமரத்துவமடைந்திருந்தார். அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, எதிர்வரும் 06.10.2025 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சாட்சியங்கள்
மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், சாட்சியங்களோடு தொடர்பான உரைகளும் இடம்பெறவுள்ளன.
உரைகளின் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச தலையீட்டின் கீழ் தமிழ் இனவழிப்புக்கு எதிரான சாட்சியங்களைத் திரட்டல் – சாத்தியமும் பலவீனங்களும் என்ற தலைப்பிலும், யாழ்.பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை தலைவர் தலைவர் கலாநிதி. தி. விக்கினேஸ்வரன், காணமலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய பலவீனப்படுத்தப்படுகின்றமையும் அதற்குப் பின்னாலான அரசியலும் என்ற தலைப்பிலும், அரசியல் செயற்பாட்டாளரான ரஜீவ்காந்த், மருத்துவர் மனோகரன் நடந்த நீதியின் தடம் நடந்தவைகளும் நினைவுகளும் என்ற தலைப்பிலும், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், பதினாறு ஆண்டுகால நீதிக்கான போராட்டம் என்ற தலைப்பிலும், பத்திரிகையாளர் அ.நிக்சன், நீதிகோரலுக்கான சாட்சியங்களைப் பெறும் வழிமுறைகளும் அதனை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும் எனும் தலைப்பிலும், சட்டத்தரணி சிறீநாத் பெரேரா, சர்வதேச நீதியினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைதல் எனும் தலைப்பின் கீழும் உரையாற்றவுள்ளனர்.
பின்னர் உரைகளில் நீதிக்காகப் போராடிய மாண்புமை மானுடன், அமரர் மனோகரனுக்கு அஞ்சலி செலுத்தவும், மிக நீண்ட இடைவெளியின் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இவ் அரசியல் கலந்துகொள்ளவும் அனைவரையும் அழைக்கின்றோம்.
மக்கள் செயல்
04.10.2025