மூதூர் – மேன்காமம் கிராமத்துக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) அதிகாலை உள்நுழைந்த காட்டுயானை அங்கிருந்த வீட்டுத் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் யானையினால் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றையதினம் அதிகாலை 5.00 மணியளவில் ஊருக்குள் உள்நுழைந்த காட்டுயானை அங்கிருந்த வாழை, தென்னைகளை சேதப்படுத்தியுள்ள நிலையில் யானை வெடி கொழுத்தி அதனை துரத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேன்காமம் குளப் பகுதியில் 4ற்கு மேற்பட்ட காட்டு யானைகள் தங்கி நிற்பதாகவும் அவை இரவு வேளைகளில் ஊருக்குள் வருவதாகவும் இதனால் தோட்டப் பயிர்களுக்கும் மக்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் விவசாய நடவடிக்கையின் போது பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நெல்லை வெட்டி வீட்டுக்கு கொண்டு வர வேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மேன்காமம் குளத்தில் நிற்கின்ற யானைகளை காட்டுக்கு அனுப்புவதற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.