இந்திய அரசு 08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்கு துரோகம் இழைத்தது.


​1987 ஒக்டோபர் 10ம் நாள் இந்திய தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ இராமச்சந்திரனுக்கு 1987 ஒக்டோபர் 1ம் திகதி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக்கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின.

இனமோதல்கள் வெடித்தன இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்ட பழிகளைச் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு.பந்த், இந்திய தூதுவர் திரு தீட்சித், இந்திய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும்,சிறீலங்கா சனாதிபதி ஜெயவர்த்தனா, தேசியபாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினை விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வது என்றும் எமது போராளிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப்படை விடுதலைப்புலிகள் மீது ஒரு விஷமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஒக்டோபர் 10ம் திகதி காலை அமைதிப்படையினர் யாழ்ப்பான நகரிலுள்ள இரு தமிழ்த் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலங்களுக்குள் புகுந்தனர். பத்திரிகை ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர் அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காகத் திருப்பிச் சுட்டோம், போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொது மக்கள்பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை , விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகின்றோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம் யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப்புலிகளை வழிநடத்தினார் . தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப்படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தன் போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார் கெரில்லாப் போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம்ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர்கொள்ளத் திரானியற்ற இந்தியப்படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொதுமக்கள் பலரைக் கொன்று குவித்தது.

பெண்கள் பலரைக் கற்பழித்துக் கொலை செய்தது இந்தப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதிமொழிகளின் படி இடைக்கால அரசைத் தமிழ்ப் பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார்ர்.ஆனால் ராஜீவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்து ‘தமிழீழ விடுதலை என்றஅரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிடவேண்டும் என் வெறியுடன் தன்னுடைய ஆயுதப்படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.

தமிழீழ விடுதலைப்  போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும் நூல் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *