
லெப்.கேணல் துருபதன்
இராசதுரை சிறிதரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
03.05.1977 – 11.10.2006
11.10.2006 அன்று முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவு.
11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி – முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட 20 மாவீரர்களின் 18 ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிகர முறிடிப்புச் சமரில் லெப்.கேணல் துருபதன் உட்பட 20 வரையான போராளிகளும் துணைப்படை வீரர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.இம்மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
- இயற்பெயர்
- சொந்த இடம்
- பிறந்த நாள்
- வீரச்சாவடைந்த சம்பவம்
- வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
- கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
- வகித்த பொறுப்பு
- இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”