இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!
ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மன்னார் எழுத்தூர் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இளைஞனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இளைஞனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.