கரும்புலி மேஜர் நிலவன்

சூரியகுமார் திலீபன்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
20.11.1976 – 14.10.1998

14.10.1998 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு.

துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்


கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன்.

இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம் என்று இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப் படைத்தளம்.

ஆட்லறிகளின் பலத்தை அடுக்கி வைத்துக்கொண்டு அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்தது இந்த படைத்தளம் எவரும் வந்து எதுவும் செய்ய முடியாது என்ற திமிர் ஆனையிறவு படைத்தளத்திற்குள் பரவியிருந்தன.

தமிழ்மக்களின் குடியிருப்புக்கள் மீது எறிகணைகளை ஏவி கோரத்தனம் ஆடியது ஆனையிறவு படைத்தளம்.

இதைத் தாக்கியளித்து இதற்கான தாக்குதல் திட்டத்தை நடைமுறைப் படுத்த அந்த தளத்தில் இருந்த கட்டளை மையங்களையும், ஆட்லறித் தளங்களையும் பற்றிய தகவல் பெறுவதற்கு கரும்புலி மேஜர் நிலவன் தலைமையில் வேவு நடவடிக்கையில் அணி களம் இறக்கப்பட்டு செயலாற்றிக்கொண்டிருந்தார்கள்.

நீண்ட நாட்களாக சேகரித்து தகவலிலிருந்து முழுமையான திட்டங்களையும் தீட்டும் வண்ணம் அமையப்பெற்றது.

இறுதியாக அந்த ஆனையிறவு படைத்தளம் மீட்பதற்கான திட்டங்களை தீட்டுவதற்காக இறுதியான வேவு நடவடிக்கைக்கு செல்லும் போது அந்த படைத்தளத்தில் எதிரியுடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் கரும்புலி மேஜர் நிலவன் 14.10.1998 அன்று அந்த மண்ணில் தேசப்புயலாய் வீசி சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *