“கரூர் சம்பவத்தில் தொடர்புடைய திமுக அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” – தமிழக பாஜக தலைவர்.

சென்னை

”கரூர் சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க., அமைச்சர்கள் விரைவில் சிக்குவர்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பேசினார்.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது சுற்றுப்பயணம் சென்னை, கொடுங்கையூரில் நேற்று இரவு நடந்தது.

தி.மு.க., பெயர் பொதுக்கூட்டத்தில், பா.ஜ., பிரசார பாடல் ‘சிடி’யை, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட, நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.

பின், நாகேந்திரன் பேசியதாவது:

பாக்ஸ்கான் நிறுவனத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என, யாரோ பெற்றெடுத்த குழந்தைக்கு, தி.மு.க., பெயர் வைக்கிறது. அதை, பாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது.

காவல்துறை கடமை சட்டசபையில் கரூர் சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடுத்த விளக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளன. பகல் 12:00 மணிக்கு வரவேண்டிய த.வெ.க., தலைவர் விஜய், இரவு 7:00 மணிக்கு வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.

‘பாட்டிலுக்கு 10 ரூபாய்’ என, விஜய் பாட்டு பாடியதும், ஜெனரேட்டர் இணைப்பு துண்டானது; செருப்பு வீச்சு நடந்தது; லத்தி சார்ஜ் நடந்தது.

இதற்கு முன் விஜய் சென்ற எந்த இடத்திலும் பிரச்னை ஏற்படவில்லை; கரூரில் மட்டும் எப்படி நடந்தது?

மருத்துவமனையில், 52 பேர் அனுமதிக்கப்பட்டனர். முதல்வரோ, 200 பேர் என்றார். அவரது கருத்து முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

‘ஒரு ஆளுக்கு பிரேத பரிசோதனை செய்ய, ஒரு மணி நேரம் ஆகும். ஆனால், அவ்வளவு விரைவாக எப்படி செய்தீர்கள்’ என, உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. உச்ச நீதி மன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. விரைவில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குவர்.

பெண்கள் குறித்து, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட பலரும் இழிவாக பேசி வருகின்றனர்.

பெண்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளன.

மத்திய அரசு எதையுமே செய்யவில்லை என கூறுகின்றனர். துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டடுக்கு மேம்பாலம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மெட்ரோ ரயில் பணிகள், 8,184 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. – இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *