
07.03.2025 – டெல் அவிவ்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு, பாலஸ்தீன கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனால், ஏற்படும் கட்டுமான தொழிலாளர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அப்படி வந்த இந்திய தொழிலாளர்களில் 10 பேர் திடீரென மாயமாகினர். இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் இருந்து 10 இந்தியர்கள் இஸ்ரேல் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், ‘ வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அல் ஜாயேம் பகுதியின் மேற்கு கரை கிராமத்திற்கு இந்தியர்களை பாலஸ்தீனர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு, அவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து, அதன்மூலம், இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்,’ எனக் கூறினர்.
பகிரவும்: