
10.03.2025 –
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இயங்கு நிலையில்தான் இருக்கிறார்கள் என்ற காரணத்தை வலுவாக்கி, இறுதிவரை வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்றாமல் வைத்திருக்க வேண்டும் எனும் இந்திய இலங்கை உளவாளிகளின் கூட்டுச் சதிக்குள் நம்மவர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பததையே தலைவரின் வீரச்சாவு அறிவிப்பு உணர்த்தி நிற்கிறது.
2009 இறுதிப் போரின் இறுதிநாளில் தலைவரின் வித்துடலை காண்பித்த பிறகும்,, 15 ஆண்டுகள் கழிந்த பின்னர் அறிவிப்பு தேவையா? ஆகவே, இவ்வறிவிப்பானது தமிழினத்திற்கு அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
உண்மையில் மாத்தையா, கருணாவை மட்டுமே தமிழினத் துரோகிகள் என்று இவ்வளவு காலமும் நினைத்திருந்தோம். ஆனால், புலம்பெயர் தேசத்திலும் பல மாத்தையாட்கள், கருணாக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது தெளிவாக காட்டுகிறது.
இனி நான் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று எவனாவது ஒருவன் முளைத்து வருவான்! நம்மையெல்லாம் ஆதாள பாதாளத்தில் தள்ளிவிடுவதற்கு!!
பொறுத்திருந்து பாருங்கள்!!!
வேதனையும், கோபத்துடனும்,,
தமிழனொருவன்.

பகிரவும்: