
10.03.2015 – தேனி
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுக இன்று தேனி மற்றும் போடியில் நடத்திய உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள் இருவர் மீது தீப்பற்றியது.
லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தி.மு.க.. எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று தேனி நேரு சிலை அருகே அவரின் உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் உருவ பொம்மை எரித்தபோது தேனி நகர நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாகண்ணன் மீது திடீரென தீ பற்றியது. அதை அணைத்தனர். பின் அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டது
வேட்டியை அவிழ்த்து ஓடிய நிர்வாகி
போடி தேவர் சிலை அருகே நடந்த உருவ பொம்மை எரிப்பு ஆரப்பாட்டத்தில் தி.மு.க., நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பரணி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் மத்திய அமைச்சரின் உருவபொம்மையை எரித்தனர். அப்போது நகர முதல் வார்டு தி.மு.க. செயலாளர் சந்திரசேகரின் வேட்டியில் தீ பற்றியது. சுதாரித்தவர், உடனடியாக வேட்டியை கழற்றி வீசிவிட்டு, உடலில் தீ படாதவாறு,குடுகுடுவென ஓட்டம் பிடித்தார்.
பகிரவும்: