
11.03.2025 – சென்னை
மத்திய அரசு அளித்த ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை த.வெ.க., தலைவர் விஜய் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 14ம் தேதி முதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் த.வெ.க., என்ற கட்சியை துவக்கி உள்ளார். அவருக்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு, ‘ஒய்’, ‘இசட்’ பாதுகாப்பை வழங்கும். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டு இருந்தது. இதன் மூலம், 8 முதுல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள் என தெரிகிறது.ஆனால், இந்த பாதுகாப்பை விஜய் ஏற்றாரா? எப்போது முதல் பாதுகாப்பு அளிக்கப்படும்? என தகவல் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், ‘ ஒய்’ பிரிவு பாதுகாப்பை விஜய் ஏற்றுக் கொண்டதாகவும், வரும் 14ம் தேதி முதல் அவரது பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பகிரவும்: