
தங்கத்தின் விலை குறைந்து
11.03.2025 – சென்னை
சென்னையில் இன்று (மார்ச் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,020க்கு விற்பனை ஆகிறது.
கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,320க்கு விற்பனை செய்யப்பட்டது. வார துவக்க நாளான நேற்று (மார்ச் 10) தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400க்கும், ஒரு கிராம் ரூ.8,050க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 11) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.8,020க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் கொடுத்து உள்ளது.
பகிரவும்: