12.03.2025 – சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:
தமிழகத்தில் தென் மாவட்டங்களில், கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்கள், பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று மழை துவங்கியது. கடலுார் முதல் கன்னியாகுமரி வரை, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
நேற்று காலை முதல் மாலை 5:30 மணி வரை, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரத்தில் 7; நாகப்பட்டினம், திருவாரூர் 6; கள்ளக்குறிச்சி, கடலுார் பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் 4; நாகப்பட்டினம், மயிலாடுதுறை மணல்மேடு 3; துாத்துக்குடி ரயில் நிலையம், 2 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யலாம். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இருப்பினும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும், பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பகிரவும்: