
14.02.2025 – ஒட்டாவா
வரும் அக்., மாதம் கனடா பார்லிமென்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஆக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. நெருக்கடி ஏற்படவே, பிரதமர் பதவியில் இருந்தும், லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ட்ரூடோ அறிவித்தார். இதனையடுத்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் ஆகவும், கனடாவின் 24 வது பிரதமர் ஆகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார்.
அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மோதல் ஏற்பட்டு உள்ளது. கனடா பொருட்களுக்கு விரி விதிக்கும் டிரம்ப், அந்நாட்டை அமெரிக்காவின் மாகாணமாக மாற்ற வேண்டும் என மிரட்டல் விடுத்து வருகிறார்.
இந்நிலையில், கனடாவின் பிரதமர் ஆக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்கா உடன் நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்புடன் மார்க் கார்னி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பார்லிமென்டில் லிபரல் கட்சிக்கு தேவையான எம்.பி.,க்கள் ஆதரவு உள்ள போதிலும் மார்க் கார்னி எம்.பி.,யாக இல்லை. இதனால், கனடா பார்லிமென்டிற்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கும் என அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
பகிரவும்: