
17.03.2025 – சிறிலங்கா
மின்னேரியா தேசிய பூங்காவில் இருந்த யுனிகோன் என்ற யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்தாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி இன்று (17) பாராளுமன்றத்தில் இதை தெரிவித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் உடல் இன்று வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 15 ஆம் திகதி யுனிகோன் என்ற யானை ஒரு குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து வனப் பாதுகாப்பு திணைக்களத்தினர் விரிவான விசாரணையை நடத்தியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெண்டி மேலும் தெரிவித்தார்.
பகிரவும்: