25.03.2025 – பிரிட்டன்
தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களில் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளமைக்காகப் பிரித்தானிய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மாண்புமிகு செயலாளர் அவர்களுக்கு!
சிறிலங்காவினால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தமிழின அழிப்புப்போரில்,படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் தடைகள் விதிக்கும் உறுதியான நடவடிக்கையை தாங்கள் எடுத்துள்ளமை நீதிக்காக போராடும் தமிழினத்திற்கு ஆறுதலைத்தந்துள்ளது. இவ்வாறான,பிரித்தானிய அரசு தமிழின அழிப்பாளர்களிற்கெதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்காக தமிழ் மக்கள் சார்பில் எமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீதி மற்றும் பொறுப்புக்கூறும் முறையை உறுதி செய்யும் இந்த முயற்சியானது , தொடர்ந்தும் நடைபெறும் மனிதவுரிமை மீறல்களைத் தடுப்பதற்கும் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கும் காத்திரமாக அமையுமென நம்புகிறோம்.
பிரித்தானிய அரசு நீண்ட காலமாக மனித உரிமைகளை முன்னெடுப்பதில் ஆதரவாளராக இருந்து வருகிறது.இப்பொழுது முன்னெடுத்திருக்கும் இந்நடவடிக்கை, நீதியை வலியுறுத்துவதோடு அதன் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புகிறது. மேலும், பிரித்தானிய அரசின் இந்த முன்னெடுப்பானது,தமிழீழ மண்ணில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்பிற்கான அனைத்துல நீதியினைப் பெறுவதில் பிரித்தானிய அரசு என்றும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுத்ததன் மூலம், நீதி மற்றும் பொறுப்புக்கூறும் முறை, நிரந்தர சமாதானத்திற்கும், நிலைத்தன்மைக்கும் அவசியம் என்பதை பிரித்தானிய அரசு உலகிற்கு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்காவில் மனித உரிமைகளை மேம்படுத்தத் தொடர்ச்சியாகப் பிரித்தானிய அரசுமேற்கொள்ளும் முயற்சிகளுக்காக நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியம் சார்பாக, மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான உங்கள் மற்றும் உங்களது குழுவினரின் உறுதியான அர்ப்பணிப்புக்கு எமது அகம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த விடையத்தில் உங்கள் கவனம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு நம்பிக்கை அளிக்கிறது.தொடர்ந்தும் தமிழின அழிப்பிற்கான அனைத்துலக நீதி கிடைக்க பிரித்தானிய அரசின் பேராதரவை வேண்டிநிற்கிறோம்.
நன்றி.
