
27.03.2025 – ஐதராபாத்
பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய போட்டி ஐதராபாத் நகரில் நடக்கிறது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஐதராபாத் அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணியும் மோதுகின்றன.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 6 ரன்னிலும், இஷன் கிஷான் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். பிறகு டிராவிஸ் ஹெட்டும், நிதிஷ் குமார் ரெட்டியும் சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். டிராவிஸ் ஹெட் 47, நிதிஷ் குமார் 32, ரன்களுக்கு அவுட்டாகினர். ஹெயின்ரிச் கியாசென் 26 ரன் எடுத்து இருந்த போது ரன் அவுட்டானார். அனிகெட் வர்மா36, அபிநவ் மனோஹர் 2, கேப்டன் பாட் கம்மின்ஸ் 18, முகமது ஷமி 1 ரன்னில் அவுட்டாகினர். ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து உள்ளது.
லக்னோ அணியின் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் லக்னோ அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
191 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் போரன் 70 ரன்களும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களும் எடுத்தனர்.
பகிரவும்: