
29.03.2025 – ஆமதாபாத்:
பிரீமியர் லீக் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ஆமதாபாத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய சாய் சுதர்சன் – கில் ஜோடி குஜராத் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்தனர்.
27 பந்தில் 38 ரன்கள் குவித்த குஜராத் அணியின் கேப்டன் கில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சுதர்சன், பட்லர் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். 24 பந்தில் 39 ரன்கள் விளாசிய பட்லர், முஜீப் உர் ரஹ்மான் பந்தில் அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் விளாசினார். அதன்பிறகு 63 ரன்னில் அவுட்டானார். இறுதியில், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது.
197 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த மும்பை அணிக்கு 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ரோகித் ஷர்மா, 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ரிக்கெல்டான் , 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து திலக் வர்மா, 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ராபின் மின்ஸ் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சூரியகுமார் யாதவ், 16 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டமிழந்தனர்.;
இறுதியில் .20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
பகிரவும்: