
31.03.2025 – நெதர்லாந்து
2ஆம் நாள் நிகழ்வு – தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணம் 2025
தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணம் 2025 இற்கான 2 ஆம் நாள் போட்டிகளாக கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கிளித்தட்டு விளையாட்டுகள் நெதர்லாந்தில் இன்று ஆரம்பமாகியிருந்தன.
முதலில், பொதுச்சுடரினை பெல்சியக்கிளைப் பொறுப்பாளர் திரு. நாதன் அவர்களும் தமிழீழத்தேசியக்கொடியினை அனைத்துலகத் தொடர்பக நிர்வாகப்பொறுப்பாளார் திரு. தினேஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து, மாவீரர் பொதுப்படத்திற்கு அனைத்துலகத் தொடர்பக விளையாட்டுத்துறை இணைப்பாளர் திரு. ரங்கன், தமிழீழ மாணவர் அமைப்பின் ஆரம்பகாலப் பொறுப்பாளர் மாவீரர் மேஜர் முரளி அவர்களின் படத்திற்கு யேர்மனி விளையாட்டுத்துறையின் கிளித்தட்டுப் பொறுப்பாளர் திரு. ஜெயா, மலர்மாலைகளை முறையே, மாவீரர் பொதுப்படத்திற்கு யேர்மனி விளையாட்டுத்துறை துணைப்பொறுப்பாளர் செல்வன் மிதுனன், யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர் செல்வன். லிவிங்ஸ்டன் அவர்களும், மேஜர் முரளி அவர்களின் படத்திற்கு பெல்சிய அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.ஜெயராஜ், பெல்சியம் முக்கியசெயற்பாட்டாளர் திரு. சிவா அவர்களும் அணிவித்தனர்.
தொடர்ந்து, மாவீரர் படங்களுக்கான சுடர்வணக்கம், மலர்வணக்கத்தை யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்ளாளர் செல்வன். சயந்தன் ஆரம்பித்துவைக்க, அங்குவந்திருந்த அனைவரும் தங்கள் வணக்கங்களை செலுத்தியிருந்தனர். தொடர்ந்து அகவணக்கம் அனைவராலும் செலுத்தப்பட்டு, 2ஆம் நாள் ஆரம்பவணக்க நிகழ்வுகள் முடிவடைய, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பினரால், பன்னாடுகள் பங்குபற்றும் கரப்பந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்போட்டிகளில், நெதர்லாந்து, யேர்மனி, பெல்சியம் வீரர்கள், வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
பகிரவும்: