
16.04.2025 – புதுடில்லி
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 32வது ஆட்டம் இன்று டில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டில்லி – ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலின் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய டில்லி அணியில் பிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் அவுட்டானார்; கரண் நாயர் ரன் ஏதுமின்றி ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். கே.எல்.ராகுல், அபிஷேக் போரல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்.
அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 ரன்களிலும், ராகுல் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து டிரிஸ்டான் ஸ்டூபர் 34 ரன்களிலும், அக்சர் பட்டேல் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை டில்லி அணி குவித்தது. ராஜஸ்தான் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் துவக்கத்தில் நிதானமாக ஆடி அரைசதம் அடித்த யாஷ்வி ஜெய்ஸ்வால் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 31 ரன்களில் காயமடைந்து வெளியேறினார். ரேயான் பாரக் 8 ரன்களிலும், நிதீஷ் ராணா 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.. போட்டியின் 20 வது ஓவரில் தரூவ் ஜூரல் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அப்போது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது.
சூப்பர் ஓவர்
இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் ராஜஸ்தான் அணி ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களம் இறங்கிய டில்லி அணி 3 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பகிரவும்: