
20.04.2025 – சென்னை
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்துக்காக என்ன தனித்த குணத்தை தி.மு.க., காட்டி விட்டது? மத்திய அரசோடு கூட்டணியில் இருந்துவிட்டு, மாநில தன்னாட்சி குறித்து பேசுவது சரியா? ஹிந்தியை திணித்தது காங்கிரஸ். இதை எதிர்த்து, நாடு முழுதும் தமிழன் தான் போராடினான். பின், அற்ப தேர்தல் அரசியல் வெற்றிக்காக, பதவிக்காக, அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது தி.மு.க., ஆனால், பா.ஜ., அரசு ஹிந்தியை திணிப்பது போல தி.மு.க., பேசி, நாடகமாடி வருகிறது.
மாநில உரிமைகளை பறித்ததும் காங்கிரஸ், அவ்வாறு பறித்தபோது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது, தி.மு.க.,தான். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, தற்போது, மாநில சுயாட்சியை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது தி.மு.க., இதெல்லாம் வெற்று வேலை. திராவிட மாடல் அரசு, தனித்த அடையாளத்துடன் செயல்படுவதாக பெருமை பேசுகின்றனர்.
லஞ்சம், ஊழலில் திளைத்திருப்பது தான் தனித்த அடையாளமா?
தேர்தல் வரும்போது மட்டும், தமிழர், தமிழர் என, தனிப்பாசம் தி.மு.க.,வுக்கு வரும். இந்த வார்த்தைகளுக்கு மயங்கும் கூட்டம், போயே போச்சு. அறிவும், தெளிவும், அரசியல் புரிதலும் கொண்ட தமிழ் சமூகம் எழுந்துவிட்டது. இனி, தி.மு.க.,வின் வார்த்தை ஜாலம் மக்கள் மத்தியில் எடுபடாது.
நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணை வைத்துக் கொள்ள, பல கட்சிகளும் போட்டி போடுகின்றன. ஆனால், வரும் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவேன்; சின்னத்துக்காக காத்திருக்கிறேன். கூட்டணி ஆட்சி அமைக்க விரும்புவது, எதிர்தரப்பின் பலவீனத்தால் கிடையாது.
என்னிடம் அ.தி.மு.க., தரப்பில் இருந்து, கூட்டணி குறித்து என்னவெல்லாம் பேசினரோ, அதையே தான் விஜயிடமும் பேசி இருப்பர். கூட்டணி தொடர்பாக, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பேசுவதுபோல், புறணி பேசக்கூடாது. – இவ்வாறு அவர் கூறினார்.
பகிரவும்: