23.04.2025 – அன்ற்வேற்பன், பெல்ஜியம்
தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 37ஆம்ஆண்டு நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர் நாளும்
1987ஆம் ஆண்டு அமைதி காக்கும் படையாக தாயகம் வந்த இந்தியப்படை தமிழர்களிற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எதிராக அநீதியை இழைத்தபோது நெஞ்சில் வெஞ்சினம் கொண்டு வீரத்தாயவள் வெகுண்டெழுந்தாள். 19.03.1988ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்றலில் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து
19.04.1988 அன்று சாவடைந்த அன்னை பூபதி அம்மாவினதும் ,தாயகவிடுதலையை உளமாற ஏற்று விடுதலை போராட்டத்தின் தூண்களாக நின்று விடுதலைப்போரட்டம் பரிமாண வளர்ச்சியை எட்டியதற்கு பலவழிகளிலும் உறுதுணையாக நின்று உழைத்து உயிர் தியாகம் செய்த நாட்டுப்பற்றாளர்களதும் நினைவேந்தல் நிகழ்வானது பெல்சியத்தில் அன்ற்வேற்பன் என்னும் இடத்தில் 20.04.2025 அன்று உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.





