30.04.2025 – வெல்லம்பிட்டி
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொடை பகுதியில் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெலவத்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்த பகுதியில் 13 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அத்தோடு, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவின் கொடுவில சந்திக்கு அருகில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெரகொடெல்ல – வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நவகமுவ பொலிஸ் பிரிவின் ஸ்வர்ணபூமி மாவத்தை பகுதியில் 12 கிராம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரும், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 11 கிராம் 917 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நவகமுவ மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றம் 33 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.